விண்ணளவு உயர்க !
பெண்ணே!
உன் கண்கள்
அன்னை தெரசாவைப போல்
கருணை மட்டும் காட்டாமல்
சுட்டெரிக்கவும் பயன் படுத்து
உன் கைகள் உணவு பரிமாற
மட்டுமல்லாமல் உன்னையே
உணவாக கேட்பவனை
அடிப்பதர்க்கும்தான்
உன் இதழ்கள் பக்த மீரா போல்
இசைக்க மட்டுமல்லாமல்
உன்னையே போகப் பொருளாக
அழிப்பவன் முகத்தில் உமிழ்வதர்க்கும்தான்
உன் கால்கள்
வெட்கத்தால் நிலத்தில்
கோலம் மட்டும் போடாமல்
காமுகர்களை எட்டி உதைக்க்கவும்தான்
உன் அறிவு
சமையலறையில்
மட்டுமல்லாமல்
கல்பனா சாவ்லா போல் விண்ணில்
உயர்ந்து பறக்க்கவும்தான் !