என் ஆசை

என் ஆசை


உடலுடன் எனக்கு,
உயிர் கொடுத்தாள்.
உலகுக்குள் என்னை,
ஒளிரச் செய்தாள்.


மழலை மொழிகள்,
புரிந்துக் கொண்டாள்.-என் ,
ஆசைகள் அனைத்தும்,
அறிந்துக் கொண்டாள்.


அப்பாவின் பெயர்,
அறிமுகம் செய்தாள்.
அவளின் பாசம்,
கொள்முதல் செய்தாள்.


எத்தனை உறவுகள்,
வரமாக வந்தாலும்,
அத்தனை உறவுகளும்,
இணையாகுமா இவளுக்கு?


அவள்தான் அன்னை.
அன்பில் வார்த்தாள் என்னை.


இரண்டே ஆசைதான் எனக்கு,


இந்த ஜென்மத்தில்,
அவளுக்கு நான்,
அன்புத்தொல்லையாக இருக்க வேண்டும்.


இன்னொரு ஜென்மம் இருந்தால்,
அவள் எனக்கு,
செல்லப்பிள்ளையாக பிறக்க வேண்டும்.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (3-Jul-13, 9:08 pm)
சேர்த்தது : nanjil sivakumar
பார்வை : 134

மேலே