நான் உயிர்த்தெழக் கூடும்

நான் எரியத் தொடங்கிய
சற்று நேரத்திற்கெல்லாம்
விட்டில் பூச்சிகளின் குவியல்
என்னைச் சுற்றிலும்.

தூரத்தில் ஃபீனிக்ஸ் பறவைகளின்
பெருங்கூட்டமொன்று
என்னை நோக்கி..
நான் எரிந்து கொண்டிருக்கிறேன்..

அப்பறவைக்கூட்டம்
நெருங்க நெருங்க
சாம்பற் படலம் என் உடலில்
படரத் தொடங்குகிறது.

நான் உயிர்த்தெழக் கூடும்..

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (4-Jul-13, 2:24 pm)
பார்வை : 127

மேலே