ஒழுக்கம் பேணுவோம் உயிர்கொல்லி தவிர்ப்போம்

ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும்
உன்னத நெறி மறந்து
உலாவுகின்ற உள்ளத்தால்
ஒழுக்கம் மறந்தான் தவறிப்போனான் ...........

மங்கலமாய் மனைவி இருந்தும்
மனம் கொண்டு காத்திருந்தும்
சுகம் தேடி பறந்துபோனான்
நோய் சுமந்து மெலிந்து நின்றான் .............

தவறான பாதை தேடி
தனிமனித ஒழுக்கம் மறந்து
பலருடனும் உறவுகொண்டு
பாவப்பட்ட நோய் சுமந்தான் .............

ஒழுக்கம் அதனை மறந்துபோனதால்
வாழ்க்கை அதனை தொலைத்து விட்டான்
உறவுகளால் ஒதுக்கப்பட்டு
நிரந்தரமாக துன்பப்பட்டான் ................

உடல் மெலிந்து உள்ளம் கனத்து
எலும்புக்கூடாய் காட்சிகொண்டான்
எவர் சொல்லியும் கேட்காதவன்
தாமதமாக தவறை உணர்ந்தான் .............

உல்லாசம் தேடி உயிர்கொல்லி சுமந்தான்
சல்லாபம் போனதால் சாபமும் பெற்றான்
சமுதாய பார்வையில் தலை குனிந்தான்
சாவுக்காக காத்து கிடக்கிறான் ..............

அரைமணிநேர சுகத்தால் ஆயுசை தொலைத்தான்
அவசர புத்தியால் ஆரோக்கியம் துறந்தான்
நடந்ததை எண்ணி தினமும் அழுதான்
நாட்களை எண்ணி மரணம் கடந்தான் ............

திருந்தி வாழ்வோம் பிறரை திருத்தி வாழ்வோம்
ஒழுக்கம் போதித்து உயர்வை வாழ்வோம்
உயிர்கொல்லிநோயை உலகம்விட்டு துரத்துவோம்
உலகம் வளம்பெற ஒவ்வொருவரும் முயலுவோம்

எழுதியவர் : வினாயகமுருகன் (7-Jul-13, 10:56 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 148

மேலே