நீயும் நானும்....
உனது வாழ் நாளில்
ஒரு முறை கூட
உன் கண்ணின் கருவிழிகள்
கண்ணீரை
பார்க்கக் கூடாது
இதற்காக
எனது
கண்கள் அருவியாக
கண்ணீரை கொட்டினாலும்
சந்தோசமே
உன் சிந்தை
எந்த வலியையும் தாங்க கூடாது
அதனால்
எனது மனம்
எத்தனை வலியை
வேண்டுமானாலும் தாங்கத் தயார்....
நட்பிற்கு எதற்கு
அதியமானும் அவ்வையும் உதாரணமாக
ஏன்?
நீயும் நானும்
இருக்கக் கூடாதா?