ரமழான் வாழ்த்து

நாணயத்தின் நாணயமாய்
அந்த நாயனின் நல்லருளாய்
நன்மையின் இருப்பிடமாய்
இந்த நானிலத்தின் கருப்பொருளாய்
இப்புவியில் பிறந்திட்டார்
எம்மை வழி நடத்திட்டார்.

ஊரு பல சென்று- அவர்
இந்த தீனின் புகழ் பரப்ப
வீதி கிடந்த கற்களெல்லாம்
அவர் மேனி பதம் பார்க்க
அவன் செயல்தான் அனைத்துமென்று
பொறுத்தார் அத்தனையும்.

அந்த புனிதர் வழி மறந்து
இந்த பூமி சுகத்தில் புதைந்து
கேடு கெட்ட பணத்திற்காய்
அவர் பயனை துறந்திட்டோம்
மடையர்களாய் வாழ்கின்றோம்.

அகிலத்தின் ரஹ்மத்தாய் அவரிருக்க
அவன் ரஹ்மத்தை எங்கேயோ தேடி
அழைகின்றோம்- அவர் வழிதன்னில்
உள்ள அமிர்தத்தை சுவைக்காமல் இந்த
புவிதன்னில் சிறு நீரை சுவைக்கின்றோம்.

இந்த ரமழானிலேனும் அவர்
வாழ்வில் ஒரு தூசய் ஒட்டிக்கொள்ள
இந்த புவி மேல்கொண்ட மோகமதை
துறந்து- அவர் துதி பாடும் அடிமைகளாய்
புதுப்பிறவி எடுத்திடுவோம்- ஒரு புது
வாழ்வை வழ்ந்திடுவோம்.

"ரம்ழான் கரீம்"

எழுதியவர் : ACMSFA (10-Jul-13, 11:34 am)
பார்வை : 337

மேலே