தேங்காமல் ஓடுவோம்

முத்திரை பதிக்க
சித்திரை எழுப்பும் கூட்டம்
நாம் அத்திரை விலக்கி
நித்திரை கொள்ள செய்வோம்

சத்தியம் வேண்டி தரையிலிருக்கும் சங்கு
பத்தியம் கொண்டு பருகிவிடும் கங்கு

சாதிக்க சாகித்ய அகடாமி தேவையில்லை ...
அது சாதித்தவர்களுக்கு மட்டுமே

தேங்கிவிட்ட குளமாகில்
அதில் தங்கிவிடும் கூழ்மம்

ஓடும் ஆறுக்கு தடைகள்
தாவியோட பல வழிகள்

கடலில் சேர்ந்திட்ட ஆறு
அது காண்பவர்க்கு பெரும் பேறு

அடைக்கலமான ஆறு
அடையாளம் கேட்டு நடத்துது போரு

பீடைகளை பாடையில் ஏற்றி
பாதைகளை விலக்கிக் கொள்

நிலவைபிடிக்க சிறகொன்று கொடக் கேட்டு
சிறகை ஒடித்து சிந்தனை வளர்க்கும் கூட்டம்

சீறிப்பாய சிதறிவிடும் சிந்தனைகள் காட்டம்
அரவணைத்தால் பூத்திடும் புது தோட்டம்

நிலவை பறிக்க நெடிய பயணம்
அன்றதற்கு மதிப்பு
பிறர் உதவிகொண்டு பிடுங்கித்தின்றால்
அதன் அர்த்தம் வேறு

தோகை விரிக்கலாம்
மழையை நம்பி அல்ல
மனதை நம்பி

எழுதியவர் : bhanukl (14-Jul-13, 3:07 pm)
பார்வை : 121

மேலே