பெண்ணின் மறுபக்கம்

மலர் மாலை சூடி மங்கலமாய்
முடிந்தது திருமணம்.......
அருகில் நின்று மலர்தூவி தூரமாய்
சென்றது பெற்றோரின் இரு மனம்..... ,
அடுத்த வீட்டுப் பெண்ணாக
அறிமுகமாகும் போது
உதட்டோரப் புன்னகை....
அங்கே ....
அலுவலக அறிமுகத்தில் நுனி நாக்கு ஆங்கிலமும்
கைகுலுக்கும் கலாச்சாரமும்
உறவுகள் எனும் போது....
கொஞ்சம்உறுத்தத்தான் செய்கிறது ....
அன்பான கணவனோடு கைகோர்த்து
பார்க்கும் முதல்படம்
எத்தனை பாப்கான் வாங்கி கொடுத்தாலும்
ஒன்றுதான் எடுக்க தோணுது .....
அப்போது
அடிக்கும் அரட்டையில் சிதறிய பாப்கான்களை கவனிக்க கூட நேரமில்லை....
எட்டுமுழப் புடவையும் எடுப்பான பொட்டும்
மணக்கும் மல்லிகையும் புதிதாகத்தான் இருந்தது....
விரித்த கூந்தலும் வெளிநாட்டு உடையும்
அங்கே அழுக்குமூட்டையில்
தூங்கிக்கிடக்குது....
விடியும் முன் எழுவது 12 மணி சீரியல்
மதிய தூக்கம் மாலை காபியும்மாய்
இனிதே முடியுது நாட்கள்....
அன்று.....
10 மணி உறக்கம் பல்துலக்காத காபி
அம்மா வின் சமையல்
என இனிமையாய் துவங்கும் விடுமுறை நாட்கள்
ஓராண்டு கழித்து அம்மா என அழைக்கும் குழந்தையும்
நல்ல கணவன் நண்பனாகும் வேளையில்
எத்தனை சுகந்திரம் கிடைத்தாலும் விட்டுபோன சுகந்திரத்தின் சாயல்
கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை ....
கல்லூரி காலம் முதல்
கணவனை கைபிடிக்கும் காலம் வரை
உள்ள இடைப்பட்ட காலம்
என்பது சிட்டுகுருவி
கொட்டும் அருவியில் தாகம் தீர்ப்பது போல்
திரும்ப கிடைக்காத நாட்களில்
திகட்டாத சுவை அது ......
-அமுத நிலா

எழுதியவர் : amuthanilla (15-Jul-13, 1:14 pm)
சேர்த்தது : amuthanilla
பார்வை : 230

மேலே