உன்னை நீ அறிந்தால்
உலகம் ஒரு நாடக மேடை
உனது பங்கு அதிலே இருக்கு
உன்னை நீ அறிந்து கொள்ளு
பிறகு உலகை நீயும் தெரிந்து கொள்வாய் .........
நல்லவர் போல நடித்து வாழ்வார்
துன்பம் கொடுக்கும் எண்ணம் கொள்வார்
இனிதாய் நகைத்து உறவு கொள்வார்
எல்லாம் போன பின்பே புரிந்து கொள்வாய் .........
உன்மேல் அக்கறை வைப்பதாய் நடிப்பார்
உலகமே நீயே என பொய்யும் உரைப்பார்
கிடைத்தைதை எல்லாம் பிடிங்கிகொண்டு
பின்பு காட்டுவார் சுயரூபத்தை .............
தூற்றி பேசும் மனித உலகில்
ஏற்றம் கொடுப்பார் எவரும் இல்லை
போட்டியென்று வந்துவிட்டால்
உன்னை போட்டு மிதிப்பார் காலின் கீழே .........
இருக்குவரையிலே ஒட்டி இருப்பார்
இழந்தபின்னாலே ஓட்டம் பிடிப்பார்
ரத்தம் உறிஞ்சும் உனியைப்போலே
உன்னை உறிஞ்சு வாழ்வை கழிப்பார் ..........
உனக்கு நீயே நலம் நாடி
உண்மையை புரிந்து வளம் தேடி
உந்தன் காலில் என்றும் நில்
உந்தன் கையை தெம்பாய் கொள்...........
முடியாதது இல்லை மனித வாழ்வில்
முடிவு எடுத்து முயற்ச்சி செய்தால்
சாதனை என்பதை நீயும் அடைவாய்
உன்னை அறிந்து முயன்று வந்தால் !

