--//..நிலா முற்றம்.-2.//-- (அஹமது அலி)

உப்பரிகை உலா
துப்பறியும் நிலா
தப்பறியும் என்றாலும்
தழுவிடும் கரங்கள்........
//
//
ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் பயணம்
விலகிட மனமிருந்தும்
விலகிடாத தருணம்......
//
//
மிருகக் காட்சி சாலை
குற்றமற்ற சிறை தண்டனை
விடுவிக்க சொல்கிறாய்
எனை சிறை பிடித்து....
//
//
அழகிய தோட்டம்
அங்கே பறவைகள் கூட்டம்
சிறகு கடன் கேட்கிறாய்
இரை தூவிக் கொண்டே....
//
//
கோடை வெயில்
ஓடையில் மயில்
தாகம் தணிக்கிறது
உன்னழகை பருகி.....
//
//
கவியரங்க சந்திப்பு
போட்டியும் தொடங்கிற்று
கவிதையை எழுதுகிறோம்
கண்களின் வழியே....
//
//
அடை மழை வேளை
குடையேதும் இல்லை
நனைந்து விடாத நடை
என்னுடை குடையாக...
//
//
அந்திமாலைக் கடைவீதி
அழகழகாய் பொம்மைகள்
அத்தனையும் வேண்டுமென்றாய்
அதிமதுரக் கெஞ்சலில்......