வாலி ayya

வரிகளால் வாழப்போவதையும்...
வான் புகழ் அடையப்போவதையும் அறிந்தே...
ரங்கத்தில் ராஜனாய் இருந்த நீர்...
நாமத்தை ..வாலி..யாய் அமைத்துக் கொண்டீரோ...
கண்ணனைத் துதியும் குலத்தோன்றல்...
மருகனைத் தூக்கினீரே பாமாைலகளால்...
நீங்கா நித்திைரகொள்ள நீ சென்றாலும்...
உறங்கும் மனதை உதைத்தெழுப்பும் உன் பாட்டு...
அழும் மனதுக்கு தாலாட்டாய் உன் பாட்டு...
அம்மாவின் அருமையை அறிவுறுத்தும் உன் பா...
அத்துனை தலைமுறையும் போற்றும் உரையன்றோ...
வெள்ளைத் தாடி தாத்தவாய்...
பூவுலகில்...
தமிழன்னையின் தவப்புதல்வனாய்...
தமிழால் வாழ்ந்திருப்பாய்...
பல தலைமுறைகள் போற்றிடவே...
பூத உடல்விடுத்து...
வானுலகம் சென்றாயோ...
வாழ்த்தியவர்கள் அடிசேர....

எழுதியவர் : nagammai.ramanathan (22-Jul-13, 3:37 pm)
சேர்த்தது : nagammai.ramanathan
பார்வை : 64

மேலே