ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி .

முறிந்தது
முதுகெலும்பு
விவசாயம் !

வாடியப் பயிரைக் கண்டால்
வாடும் வள்ளலார்
விவசாயி !

நீர் உயர
தானும் உயரும்
தாமரை !

வெட்கும்
அக்றிணை
நாணல் !

இயந்திரமனிதன் விஞ்ஞானம்
மனிதன் இயந்திரமானான்
உலகமயம் !

ஆரம்பத்தில் கிட்டும்
அப்புறம் கிட்டாது
நல்லபெயர் மனைவியிடம் !

தானம் தர முடியாதது
தானே பயன்படுத்துவது சிறப்பு
மூளை !

அயல்நாட்டில் இல்லை
நம்நாட்டில் தொல்லை
சாதி !

யானையின் மதமானது
மனிதனின்
மதம் !

பறிபோனது
பகுத்தறிவு
சாதி மத வெறி !

வரவேண்டும் இயற்கையாக
வரக்கூடாது செயற்கையாக
மரணம் !

மகத்தானது
மதிக்க வேண்டியது
மனிதநேயம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (25-Jul-13, 8:58 pm)
பார்வை : 111

மேலே