எல்லாம் பொய்
இவ்வுலகில்
வெளிப்படையாக
பேசும் இதயங்களை
விட,
உள்ளுக்குள்
வஞ்சனைகளோடு
பேசும் இதயமே அதிகம் ....
உண்மையான
இதயங்களை
தேடி அலைகிறேன்
இருந்தும்
முகம் உண்மை
உயிரோடு துடிக்கும்
இதயம் பொய்......
ஒவ்வொரு நாளும்
எண்ணற்ற
மனிதர்களை
சந்திக்கிறோம்
ஆனால் அதில்
உண்மை முகம் எது
பொய் முகம் எது
தெரிய வில்லை .......
சில சமையங்களில்
நம்மோடு இருக்கும்
மனிதர்களே
நமை ஏமாற்றி விடும்
போது - நாம் எப்படி
தெரியாத மனிதர்களை
நம்புவது .....
சுதந்திரம்
நம் நாட்டுக்குத்தான்
கிடைத்துள்ளது
இன்னும் மனிதர்களுக்கு
கிடைக்கவில்லை ........
முதல் பொய்
தாயிடமே
சந்திக்கிறோம்
அவள் நமக்கு
சாதம் ஊட்டும் போது
இரண்டாவது பொய்
தந்தையிடம்
அங்கெ போகாதே
பேய் இருக்கும் .....
இது தான் பொய்யின்
முதல் படி - இப்படியே
வளர தொடர்கிறது .....
எல்லாம் பொய் முகம் ,
பொய் வேஷம்,
பொய் நடிப்பு
இப்படி இருக்கும் போது
எப்படி இந்த மண்ணில்
வாழ முடியும் ......