இந்தியா முழுதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 555 என்கவுண்டர்...?

இந்தியாவில் கடந்த 2009 - ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013 - ம் ஆண்டு பிப்ரவரி 15 - ஆம் தேதி வரை பாதுகாப்பு படைவீர்கள், துணை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி என்கவுன்டர் நடத்தப்பட்டுள்ளன.
உ.பி.யில் தான் அதிகம் 138 என்கவுண்டர்கள்...
அசாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட்,சட்டிஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன. அசாம் தவிர ஏனைய மாநிலங்கள் மாவோஸ்ட் கள் அதிகம் உள்ள பகுதியாகும்.
மணிப்பூர் - 62, அசாம் - 52, மேற்கு வங்கம் - 35, ஜார்கண்ட் - 30, ஓடிசாவில் - 27,ஜம்மு காஷ்மீர் 26, தமிழ் நாட்டில் - 23, மத்திய பிரதேசத்தில் - 20 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 2011 - 12 - ம் ஆண்டு - 197
கடந்த 2009 - 10 - ம் ஆண்டு - 103
கடந்த 2010 - 11 - ம் ஆண்டு - 129
இவற்றில் பெரும்பாலான வழக்குகள் தேசிய மனித உரிமைக் கமிசன் தலையீட்டின் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஏசியன் சென்டர் இயக்குனர் சுகாஸ் சக்மா தெரிவித்துள்ளார்.
இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உள்ள புள்ளி விபரங்கள்...
இவைபோக கடந்த பத்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தான் அதிகமான என்கவுண்டர் நடந்துள்ளன...
மேலும், மாவோஸ்ட்கள் இருக்கும் ஐந்து மாநிலங்களைப் பற்றி சொல்ல வேண்டாம்...
ஆக, உலகமயமாக்கல் முற்று முழுக்க உலகம் முழுதும் பரவி இயங்கி வரும் வேளையில் தான் இது போன்ற மனித தன்மையற்ற செயல்கள் இந்தியா முழுதும் நடந்தேறி வருகின்றன எனலாம்..
தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி என்று அசுர வேகமாக வளர்ந்து வரும் வேளையில் தான் இது போன்ற சட்டத்துக்கு புறம்பான மனித உரிமை மீறல்களும் நடந்தேறி வருகின்றன.....
மக்களின் சட்ட உரிமை, பாதுகாப்பு, ஜனநாயகம் போன்றவற்றை பலப்படுத்துவதற்குப் பதில்...
துப்பாக்கியால் தீர்வு கண்டு விடலாம் என்று சொல்கிறார்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றி வரும் அரசுகள்...
பயங்கரவாதம்...தீவிரவாதம் இவற்றில் இருந்து தேச பாதுகாப்பு என்ற பெயரையே அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான டோனி பிளையர் தற்பொழுது குரான் புத்தகம் படித்து தனது பாவ செயல்களை நிவர்த்தி செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகிறார்...
கடும் சட்டங்களும், குற்றங்களுக்கு துப்பாக்கி சூடும் இருந்தால் போதுமானவை என்று கருதி ஆட்சி நடத்துகிறார்கள்....ஆனால் இவற்றின் மூலம் நிரந்தர தீர்வு கண்டுவிடலாம் என்று ஒற்றைப் பாதையில் போய்விடலாம் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்....!
ஆட்சியாளர்களுக்கு எதிராக எப்பொழுதும் இருந்துள்ளது மனித சமூகங்களின் வளர்ச்சி என்பதை ஏற்க மறுக்கிறார்கள் என்று கருதலாம்...!
சங்கிலிக்கருப்பு