யார் இந்த ஆமீனா வதூத்......?

சென்னை கல்லூரி நிகழ்ச்சி......
ஆமீனா வதூத் அமெரிக்க பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு துறை பேராசிரியை. சிறந்த பெண்ணிய வாதி.

சில ஆண்டுகளுக்கு முன் பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர்.

அமெரிக்க கருப்பின பெண்ணான இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. குறிப்பாக இஸ்லாமிய வரலாறு மற்றும் பெண்ணுரிமை குறித்த பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

குறிப்பாக Inside The Gender Jihad: Women's Reform in Islam , Personnalite Politique
Afro-Americaine: Barack Obama, Malcolm X, Condoleezza Rice, Qur'an and Woman: Rereading the Sacred Text from a Woman's Perspective போன்ற முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார்.

இன்று சென்னையின் புகழ்பெற்ற எஸ்.ஐ.டி கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் அவர் கலந்து கொள்ள சன்னிதானம்
( பீஜே ) தலைமையிலான வஹ்ஹாபிய அமைப்பான தமிழ்நாடு தறுதலை ஜமா அத் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக அக்கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய பாசிசவாதிகளின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. இதனை அதிகார வர்க்கம் தான் எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, இந்துமுன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்வ அமைப்புகள் இயங்கும் பட்சத்தில் இவர்களின் இருப்பும், இயக்கமும் ஆச்சரியமில்லை தான்.

இப்படியாக கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் இம்மாதிரியான பாசிச இயக்கங்கள் தடை செய்யப்பட வேண்டும். பெண்கள் சார்ந்த விவகாரங்களை இவர்கள் எதிர்கொள்ள துணிவற்றவர்கள் என்பதையே இது காட்டுகிறது.

நன்றி
பீர் முகமது
குட்டிரேவதி

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (30-Jul-13, 11:31 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே