இபொழுது தெலுங்கானா..! பிறகு...?

ஆந்திராவிலிருந்து ராயலசீமா...
உத்தரபிரதேசத்தில் இருந்து புர்வன்சல், புந்தேல்கந்த், அவாத் பிரதேஷ் மற்றும் பட்சீம் பிரதேஷ்...
குஜராத்தில் இருந்து சௌராஷ்டிர...
கர்நாடாகாவில் இருந்து கூர்க்....
மேற்கு ஒரிசாவில் இருந்து கோசலாஞ்சல்...
பீகார் மாநிலத்தில் இருந்து மிதிலாஞ்சல்...
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கூர்க்கலாந்து...
அசாமில் இருந்து போடலாந்து...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விதர்பா......
தமிழ் நாட்டில் இருந்து தென் தமிழ் நாடு, வட தமிழ் நாடு, கொங்கு நாடு...
இவை எல்லாம் புதிதான மாநிலங்களாக வருவதற்கு அதிகப்பட்ச வாய்ப்பு உள்ளது....உருவாகிவிடும்....ஆனால், தமிழ் நாட்டில் இருந்து வெறும் பேச்சுக்குக் கூட காத்தும் வராது..... வெளிச்சமும் வராது...என்பது வேறு விஷயம்...!
காங்கிரஸ் மற்றும் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டை அன்னியருக்கு விற்பதற்கும், கார்ப்பரேட் டிடம் விற்பதற்கும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்...அவர்கள் மேலும் மேலும் மக்களை கசக்கிப் பிழிந்து பெரும் சதவீத மக்களை வறுமையில் வைத்திருக்கையில்,
ஆக,
புதிதான மாநிலங்கள் ஏன் உருவாகின்றன....ஒரு இன மக்கள் ஒதுக்கப்படும் போதும்...அணைத்து வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்படும் போது அவர்கள் மாநிலங்கள் உரிமை கிடைத்தால் வாய்ப்புகளும் பலன்களும் கிடைக்கும் என்று உறுதியாக நினைக்கிறார்கள்...சட்டமும் அதை அங்கீகரிக்கிறது...
ஆனால் மாநிலங்கள் புதிதாக உருவாகினாலும் அந்த மாநில மக்களுக்கு எந்த பலன்களும் கிடைக்காது, இருக்கும் சில பல வாய்ப்புகளை பலன்களை அங்கிருக்கும் மேட்டுக் குடியினரே கைப்பற்றிக் கொள்வார்கள்...மொழிகள் வேண்டுமானால் வளரும்.... செழிக்கும்... வாய்ப்பை பெறலாம்...
ஆறுகள், நதிநீர் பங்கீடுகள், காவல்துறை மற்றும் நிதி நிர்வாகம் போன்றவை புதிதாக உருவாகலாம்...ஆனால் பெருவாரியான மக்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே தான் வாழ நேரிடும்..
எனவே, மாநிலங்களின் உரிமைகளை பெற்றும் இவையெல்லாம் கிடைக்காவிடின், தனி நாடு உரிமையைப் பெற போராடுவார்கள்...என்று அச்சம் கொள்கிறது இந்திய உள்துறை...
நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஏன் சுற்றி வளைத்து கேட்பானேன்...
போராடுவானேன்...? ஸ்டைட்டா தனி நாடு கேட்க வேண்டியது தானே...
என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...!
ஐரோப்பியர்கள் முன்பு சில நாடுகளாக இருந்தார்கள் ....பிறகு 36....46....
நாடுகள் என்று தனி நாடுகளாக பிரிந்து சென்றார்கள்... வளர்ந்தார்கள்...
வாழ்கிறார்கள் மிக செழுமையாக...!
தற்போதைய நிலையில், பெருவாரியான மக்களுக்கான ..அரசு, வெளிப்படையான அரசு நிர்வாகம்... மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் பாராளுமன்றம்....சட்டம், நீதி என்று போராட ஆரம்பிக்கும் சூழலில்....
தனி மாநில கோரிக்கை தனி நாடு கோரிக்கையாக மாறுவது தவிர்க்க இயலாதது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
ஆக, ஆசியச் சூழலில் தனி நாடு கோரிக்கை மிகப் பலமாக மையம் கொள்கிறது எனலாமா...?
சங்கிலிக்கருப்பு