காற்றினிலே ஒரு காதல்

காற்று வந்து
கன்னம் தொட்டு
கவிதை சொன்னது
அது உன்
பேச்சு கலந்த காற்று...

வாசம் தந்து
வானம் மேலே
பறக்க வைத்தது
அது உன்
மூச்சு கலந்த காற்று....

பூக்களாய் புன்னகைத்து
புதியதாய் என்னை
உணரவைத்தது
அது உன்
கன்னம் தொட்ட காற்று

வண்ணம் கொண்டு
வானவில்லாய் விரிந்து நின்றது
அது உன்
கண்முன் திரிந்த காற்று ...

என் விரல் சேர்க்க
ஏங்கி நிற்கும் கதை சொன்னது
அது உன்
விரலிடுக்கில் புகுந்த காற்று...

என் கண்கள் பூத்து
ரசிக்க செய்தது
அது உன்
காது ஜிமிக்கியை ஆட்டிவிட்ட
சேட்டை காற்று..

அலை அலையாய் அசைத்து
என்னை உலுக்கியது
அது உன்
கூந்தலின் சில முடிகளை
தவழ வைத்த காற்று...

"இடை தரகனாய்
காற்று வேண்டாமாம்
அதுகூட நுழையாமல்
கட்டியணைக்க காதலன்
வேண்டுமாம்"
கூறி கதறி அழுதது
உன் தேகம் தொட்ட காற்று...

உன் கண்ணிலுள்ள
காதல் காண
நேரில் வரும் நாள் வரை
கனவோடு கண்மூடு காதலி
உன் காது புகுந்து
என் காதல் சொல்லும்
இந்த கவிதை கலந்த காற்று....

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (1-Aug-13, 9:38 pm)
பார்வை : 436

மேலே