+நீவந்த நாள்முதலாய்+

டைட்டானிக் பார்த்தபோது
தோன்றாத காதல் உணர்வு
கண்ணே உன்னைக்கண்டபோது
பொங்கிக்கொண்டு வந்ததென்ன!

இலக்கியத்தை படித்தபோது
புரியாத வரிகளெல்லாம்
அழகி உன்னைக்கண்டவுடன்
அற்புதமாய் புரிந்ததென்ன!

வரலாற்றைக் கேட்டபோது
மறந்துபோன ஆண்டும்போரும்
அன்னமுந்தன் அருகினிலே
மண்டியிட்டு வருவதென்ன!

பலவற்றை பார்த்தாலும்
பலவற்றை படித்தாலும்
சிலமட்டும் சிந்தனையில்
சிதறாமல் நிலைத்திருக்கும்!

நீவந்த நாள்முதலாய்
நித்திரையை தொலைத்துவிட்டு
நின்னைமட்டும் நினைத்துக்கொண்டு
நிலையின்றி ஆடுகிறேன்!

நீல‌வான நிலவுநீ!
நீர்போன்ற தெளிவுநீ!
நீதிதந்து என்னில்வந்து
நீங்காமல் நிலைத்திடுநீ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Aug-13, 2:08 pm)
பார்வை : 61

மேலே