அடிபெண்ணே என்னை வாழவிடு

ஒரு வர்த்த இல்ல என் வலியை சொல்ல
என் காதல் இன்று என்னோடு இல்ல
மரணம் உணர்கிறேன் நானே
காரணம் அன்பே காதல் தானே ..........

உணர்வானது காதல்
உயிரானது என்னில்
உயிரானதால் தானோ
வாழ்க்கை கூட வாழ வெறுக்குது

கனவுகள் என்றால் காலையில் தொலையும்
கவிதை என்றால் படித்ததும் மறையும்
கானல் நீரால் தாகம் தீராதே
காதல் சோகம் என்றும் போகாதே

எத்தனை உனக்கென்ன நாளும் இழந்தேன்
அத்தனை இழந்தும் சுகமென உணர்ந்தேன்
என்னுலகம் உன் உருவாய் மாற்றி வைத்தேன்
தனிவுலகம் வேண்டி தவித்தேன்

நீ வெறுத்து போகையிலே ......
என்னை மறுத்து போகையிலே
உன் காதல் வேண்டாம் மனதை திருப்பிகொடு
அடிபெண்ணே என்னை வாழவிடு

எழுதியவர் : ருத்ரன் (2-Aug-13, 6:50 pm)
பார்வை : 54

மேலே