..............இருக்கும்.............

மண்ணுக்குள்ள போறவரைக்கும்,
மனசுக்குள்ள காதலிருக்கும் !
உசுருக்குள்ள உன்னவிரட்டும்,
ஓட்டம் எப்படி நின்னு தொலைக்கும் !
ஒனக்கும் எனக்கும் உள்ள சுணக்கம்,
ஒட்டிவருமடி கடைசிவரைக்கும் !
ஒரேயடியா நீ தனிஞ்சுபோனா,
பாடையில்தாண்டி நெஞ்சு படுக்கும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Aug-13, 7:27 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 51

மேலே