உனக்கு இல்லை ஊனம்

என்னம்மா கேட்கிறாய்
எதற்கு என்னை பார்க்கிறாய்
பாவம் செய்த எங்களால்
ஊனம்முற்று நீயும் பிறந்திட்டாய்

ஊனம் என்று உன்னை சொல்ல
ஒருதுளியும் விருப்பமில்லை எனக்கு
ஊரார் அப்படி உன்னை கூப்பிடுகையில்
தடுக்கவும் முடியவில்லை எனக்கு

ஊனமுற்று நீ பிறந்தது
இறை கொடுத்த வரம் உனக்கா ?
இறையையே தினம் வணங்கும் எனக்கு
இது இறை காட்டும் வெறுப்பா ?

வானில் அழாகாய் தோன்றும்
நிலவுக்கு கூட சொந்த ஒளி இருப்பதில்லை
சூரியனால் அது ஒளிர்ந்தும் கூட
யாரும் அதனை ஊனமென்று பார்ப்பதில்லை

என் குழந்தையே
நீயும் கவலைப்படாதே
ஊரார் ஊனம் என்று கூப்பிட்டாலும்
நீ அதனை ஒரு போதும்
செவிதாழ்த்திவிடாதே

ஊனம் என்பது உடல் சார்ந்ததல்ல
மனம் தூய்மையான பின்
ஊனமே ஒருவருக்கு உரியதல்ல
நீயே மனம் தூய்மையானவன்
நீ என்றும் ஊனம் அற்று வாழ்பவன்

ஊனம் என்று உன்னை
எவனும் கூப்பிடுகையில்
நீ எழுந்துநின்று கேள்
உன் மனம் தூயதென்றால்
என்னை அப்படி கூப்பிடு என்று சொல்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (3-Aug-13, 12:18 am)
பார்வை : 107

மேலே