உன் பார்வை ஒன்றே போதுமடி

ஒரு வார்த்தைக் கூட
நான் பேசியது இல்லலை -ஆனால்
சிறு பார்வை பார்க்க
நான் தவறியதில்லை !

என் காதலை சொல்ல
நான் தயங்கியதில்லை
நான் சொல்லும் தருணம் -அவள்
ஏனே அருகிலில்லை !

அவள் பார்க்கும் பார்வையில்தான்
நானும் பார்த்துதான்
ஏதோ கனவில் அவளின் நினைவில்
நாளும் அலைந்தேன் !

அவள் பேசும் வார்த்தையில்தான்
நானும் பேசித்தான்
ஏதோ எண்ணத்தில் அவளின் பின்னத்தில்
நாளும் கலந்தேன் !

அவளின் நிழலுக்கு கிடைத்த உரிமை
எனக்கு கிடைக்கவில்லை
அவளை பின் தொடர ..!

ஒரு மலருக்கு கிடைத்த வரம்
எனக்கு கிடைக்கவில்லை
அவளின் மேல் படர ...!

உன் பார்வை ஒன்றே போதுமடி
நன் இந்த ஜென்மம் வாழ்ந்திட !


பாலாஜி

எழுதியவர் : balaji (3-Aug-13, 5:33 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
Tanglish : kaadhal kavithai
பார்வை : 107

மேலே