என் கிறுக்கி - 3

லேடி பேர்ட் சைக்கிள் பஞ்சர் அதனால்தான் கிறுக்கி தரை இறக்கம்...

இனி கிறுக்கியைப் பற்றி,.

பொன் நிறத்தவள்... வாழைமர உடலழகி.. கொஞ்சம் சிரிப்பழகி.. ரொம்ப "வாயாடி".. மொத்தத்தில் "அருந்த வாழு குறும்பு தேளு... ஆனாலும் ஏஞ்சலு ... நம்ம சண்டக்கோழி மீரா மாதிரி...
"உச்சி முதல் உள்ளங்கால் வரை இதுதான் அழகென்று கூற முடியாத பேரழகி"

கிறுக்கனின் வகுப்பில் படிக்கும் ஒரே அழகி ... படிப்பில் சுமார் ரகம் தான் ஆனால் கிறுக்கனை விட அறிவாளி..

லேடி பேர்டோடு நின்று கொண்டிருந்த கிறுக்கியின் அருகில் சென்றான்.. ஏதாவது உதவி வேண்டுமா என்பது போல அவளை நோக்கி இருந்தது அவன் பார்வை... அவளோ இவனை யாரென்றே தெரியாதது போல மெதுவாக சைக்கிள் ஐ உருட்டியபடி சென்றாள்...
கிறுக்கனோ.. செம கடுப்பில்.. ஏதோ கேட்பது போல் வந்து கேட்காமல் கிறுக்கியின் பின்னால் நின்றுகொண்டிருக்க கிருக்கியோ முன்னால் நடந்துகொண்டிருந்தாள்...

கிருக்கனுக்கோ ஏதும் ஓடவில்லை .. ஏன் இவள் இப்படி செய்கிறாள் என்று அவளின் செய்கை அவனது கண் முன்னாள் பல முறை வந்து போனது... அரை மனதோடு பேருந்து நிலையம் நோக்கி பயணித்தான்.. தனது ஊர் செல்லும் பெருத்து அனைத்தையும் விட்டு கொண்டே இருந்தான் ... அந்த சமயம் கிறுக்கியின் செய்கை அவனை காயப் படுத்தி இருந்தது... ஒருவழியாக பேருந்தை பிடித்து வீடு வந்து சேர்ந்தான்...

எப்பொழுதும் கலகலவென இருக்கும் கிறுக்கன் சோகமாகவே காணப்பட்டான்.. தினமும் இரவு நண்பர்களை சந்திக்கும் அவன் அன்று தவிர்த்தான் .. அம்மாவிடம் தலை வலிபதாக பொய் சொன்னான் அன்றைய இரவு உணவைத் தவிர்ப்பதற்காக..

மறுநாள் கிறுக்கன் பள்ளிக்கு வந்தான் அனால் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டான்... கிறுக்கி பள்ளிக்கு வரவில்லை ... முகமெல்லாம் வியர்த்து ஊற்றியது கிறுக்கனுக்கு... ஏன் வரவில்லை கிறுக்கி என்று யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை கிறுக்கனுக்கு ...மறுநாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை கிறுக்கியின் தோழி மூலம் அறிந்து கொண்டான்.. கிறுக்கன்...

இன்னும் கிறுக்காக்குவாள்..

எழுதியவர் : G .Udhay .. (3-Aug-13, 6:52 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே