கிறுக்கல்

நான் எழுதும் அனைத்தும் கிறுக்கல் என்கிறார்கள்... புரியவில்லை என்று புலம்புகிறார்கள்

ஆனால் என் புலம்பலையோ நீ கவிதை என்கிறாய்.. நம்பிக்கையூட்டி எழுது என்கிறாய்!!

என் கிறுக்கலில் ஒளிந்திருக்கும் கதறல்களை உன்னை தவிர யாரும் அவ்வளவு எளிதில் உணர்ந்து விட முடியாது என நிரூபித்து விட்டாய்!!

என் வரியில் ஒளிந்திருக்கும் நீ என்பது நீ தான் என எப்போது உணர போகிறாய்... காத்திருக்கிறேன் என்றாவது புரிந்துக் கொள்வாய் என்று!

என் கதறல் உன் செவியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் எடுத்து எழுதுகிறேன்.. உனக்கான முதல் வரியை என் ஒவ்வொரு கிறுக்கலிலும்!

எழுதியவர் : மலர் (3-Aug-13, 8:31 pm)
Tanglish : kirukal
பார்வை : 121

மேலே