உறுதியெடுப்போம் நண்பர்களே

எங்கெங்கோ பிறந்திருந்து
இதயத்தால் ஒன்றிணைந்து
நண்பர்களாய் நாம் பழகி
நலம் பல பெற்றிடுவோம் ........

உண்மையான உறவு கொண்டு
ஒருவருக்கு ஒருவர் உதவிவாழ்ந்து
அன்பால் நாம் இணைந்து
அகிலம் அனைத்தையும் வெல்லுவோம் ........

வேற்றுமை குணம் மறந்து
ஒற்றுமை அதை வளர்த்து
நட்பு என்னும் மார்க்கம் கொண்டு
மத மார்க்கம் தவிர்த்திடுவோம் .........

தீங்கு செய்யும் எண்ணம் தவிர்த்து
தீய செயல்களில் ஈடுபாடு தவிர்த்து
நல்லவைகளுக்கு பாடுபட்டு
நற்செயல்களை நாம் புரிவோம் ........

வீடு மீதும் பற்று கொண்டு
நாட்டு மீதும் பற்றுகொண்டு
தேசநலனுக்கு தியாகம் செய்து
தியாக மனதோடு வாழ்ந்திடுவோம் .........

ஊர்போற்றும் பிள்ளையாகவும்
உண்மையை நாட்டும் பிள்ளையாகவும்
நேர்வழியில் நாம் சென்று
நேர்மையாய் வாழ்ந்திடுவோம் ...........

துன்புறுத்தல் இல்லாமல்
இன்முகத்தோடு நாள் நகர்த்தி
எதிரியென்று எவருமில்லாமல்
இவ்வுலகை மாற்றிடுவோம் ........

மயக்கம் தரும் மதுவை தவிர்த்து
மாது மீது மயக்கம் விடுத்து
பொருள் பணம்மீது நாட்டம் குறைத்து
நட்புக்காக முதலிடம் கொடுப்போம் ......

இணைந்து பிறக்காத ரத்த உறவுகள்
இணைத்து வாழ்வோம் மொத்த காலமும்
உறுதி எடுப்போம் நண்பர்கள் நாளில்
உறுதியாய் வாழ்வோம் நண்பர்களாய் நாமும் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Aug-13, 6:00 pm)
பார்வை : 118

மேலே