****************நம் மொழி அறிவோம் *************

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் ?
மோட்சத்தின்
வாயில் என்று
நரகத்திற்கா?

புதுமை செய்வதாய்
நினைத்து
புதைகுழியை போற்றி
துதி பாடும் பூமியின்
பாரங்களே ..............

அன்னையின் விரல்களை
நறுக்கி விட்டு
அடுத்தவர் மொழிக்கு
நகசாந்து ஏன்
பூசிக் கொண்டிருக்கிறீர்கள் ????????

உன் சாதனை என்ன
உன்
மொழியை
சாகடித்தல் தானா ?

மொழி என்றால் என்ன ?
பதில் சொல்லுங்கள் !பேசுவது மட்டும் தானா?

மொழியானது
நம்
ஆன்மாவின் ஆனந்தம் !
உயிரின் ஒட்டு மொத்த உணர்வு !
பிரபஞ்ச விடியலின் முதல் துளி !
தலைமுறையின் பங்கீடு !

பணம் என்கிற
பகுதியை வைத்துக்கொண்டு
நம் மொழியை
பாழாக்கும் பண்பாடு அற்றவர்களே ?
வாழ்க்கை வாழ்க்கை
என்று
ஏன்
வாழ்வை இழக்கிறீர்கள் ?

தாய் மொழியை
தண்டிப்பவன்
தன்னை இழப்பான்!
மொழியை முடக்குபவன்
முழுவதும் இழப்பான் !

அடுத்தவர் மொழியைப்
பற்றிக் கொண்டு
ஆட்டம் போடும்
அறிவிலிகளே ....................
என்ன தெரியும்
நம் தமிழ் மொழியைப் பற்றி ????????????

அதன் ஆண்டு தெரியுமா ?
அதன் புகழ் தெரியுமா ?
அது
வழிகாட்டிய விதம் தெரியுமா ?
அதன் பண்பாடு தெரியுமா ?
அதன் ஆழம் தெரியுமா ?
அது நிகழ்த்திய
சரித்திம் தெரியுமா ?
இல்லை ,
அதன் சாதனையை
போற்ற வேண்டிய ,
பாதுகாக்க வேண்டிய
பொறுப்பை காலம் உன்னிடம் தந்ததை
நீ
கல்லறையில் ஏற்ற உனக்கு
தெரியாமலே
நேரம் குறித்து கொண்டிருப்பது தான்
தெரியுமா ?
எது தெரியும் உனக்கு ????

கண்மூடி கிடந்து
கனவு கண்டால் மட்டுமே
கவனிக்க படும்
கால கொடூரர்களே ..............

இனி
என்ன செய்ய போவதாய்
உத்தேசம் ???
உங்கள் அற்ப சுகத்திற்காக
அடுத்த கால்வழிகள் அல்லவா
கண்டபடி
சரிந்து கிடக்கிறது ?

நுனி நாக்கு ஆங்கிலமும்
நொய் ந்து போன உணவும்
நூறு வயது
வாழ்வை தரக்கூடுமா ?
இல்லை
.காற்றாற்று வெள்ளம் தான்
பெருங்கடலுடன்
போட்டியிட முடியுமா ?

வா .................
கொஞ்சம் மொழியறிவோம் !
போனது போகட்டும் ,
போர்க்களத்தில் நீர் தெளித்தால்
பூ கூட புன்னையுடன்
பூத்துக் குலுங்கும் !

படி !
தமிழின்
இலக்கியத்தையும் ,இலக்கணத்தையும்
அதன் இன்பத்தையும் ,உயிர்ப்பையும்
ஆழ்ந்து ,
உணர்ந்து,
புரிந்து படி,
பின்பு பார் !
உன் உள்ளுக்குள்
இதயம் இருமடங்காய் துடிக்கும்
பரிதவிக்கும் !
பரவசப்படும் !
கவின் சிறப்பில் கண்கள்
உறங்க மறுக்கும்!
திருக்குறள் படித்து திருந்த தோன்றும் !
தீக்கதிராய் புரட்சி
உன்னுள்
புதுமை செய்யும் !
இத்துணை நாள் நீ செய்த
பாவத்திற்கு
பரிகாரம் செய்யத் தோன்றும் !

தமிழ் மறந்த
மறக்கடிக்க பட்ட
என்
தமிழ் இனமே !!!!!!!
உன் மொழி அறி !
தன்னடக்கம் வரும் !
தன்மானம் தலை நிமிரும் !
தன்னம்பிக்கை பிறக்கும் !
உன்னையும் ,ஊரையும் உன் தமிழ் உலகையும் அறியும் உத்வேகம் பிறக்கும் !
உள்ளத்தில் உண்மை வரும் !
உன் ரத்தம் கூட ரசவதப்படும் !
மொழியின் அழகில்
மௌனம் அர்த்தப்படும் !
தமிழ் படித்தவர்களை ,பேசியவர்களை
தமிழ் பித்தன் என்று
கேலி செய்த
உன் அதே உதடு
தமிழ் சித்தராய் அவர்களை போற்றி
துதிப்பாடும்!
தமிழ் அறி !!!!!!!!!!!

மாற்றங்களால் முடியாதது
மண்ணுலகில் இல்லை !
வீழ்ந்து எழாதது
வெற்றிக்கு அடித்தளமும் இல்லை !


என் இனிய தோழமைகளே !
ஒன்று கூடுவோம் ,முதலில்
நாம் நம் மொழியை அறிவோம்.............
வருங்கால சந்ததிக்கு
பகிரங்கமாய் அறிமுகப் படுத்துவோம் !

நம் ஒற்றுமையின் வலிமை
உலகை
உலுக்கட்டும் !
நாம் பறையடித்து சொல்லப் போகும்
நம் மொழியின் பெருமை
மற்ற மொழிகளை
பொறாமையின் உச்சத்திற்கே
கொண்டு செல்லட்டும் !!!!!!!!!!!
வாருங்கள்
நம் மொழி அறிவோம் ................!

எழுதியவர் : yathvika (6-Aug-13, 2:12 am)
பார்வை : 495

மேலே