தீப்பெட்டி சரித்திரம்!

தீப்பெட்டி சரித்திரம்!
தீப்பெட்டியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர் என்ற ஆங்கிலேயர். இவர் துப்பாக்கியில் வேகமாக தீப்பற்ற வைக்க பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரு குச்சியில் வைக்க முயன்றார்.
அப்படி முயன்றதே தீக்குச்சி கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால், இவர் கண்டுபிடித்த தீக்குச்சி எதில் உரசினாலும் தீப்பிடித்தது. அந்தத் தன்மையை மாற்றி தீப்பெட்டியின் ஓரங்களில் பூசப்பட்டு இருக்கும் பாஸ்பரஸில் உரசினால் மட்டுமே தீப்பிடிக்கும் பாதுகாப்பான முறையைக் கண்டுபிடித்த பெருமை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான் என்பவரையும், காரல் லன்டஸ்ட்ராம் என்பவரையுமே சாரும்.
இவர்கள்தான் இன்றைய "சேப்டி மேட்ச்' எனப்படும் தீப்பெட்டியை உருவாக்கியவர்கள். இவர்கள் இதை 1852-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
நன்றி ;என்.ஜரினாபானு, திருப்பட்டினம்.