இயற்கை
எத்தனை அழகு உன்னிடம்...
எப்படி சொல்வேன் இவ்விடம்...
இயற்கையே இறைவன் உன்னை படைத்தானா?
உன்னால் இறைவன் பிறந்தனா?
இருவரும் இங்கே சமம்தானா
உன்னுள் இறைவன் இருக்கனா?
என கேள்விகள் என்னிடம் பல...
தொட முடியாத தொடு வானமாய்
இருப்பது நீதான்..
பட முடியாத பட்டினியை போக்க
மழையாய் வந்தது நீதான்..
அழகான அதி காலையும்..
மதி மயக்கும் மாலையும்..
பொழுதான வேளையும்..
கொண்டவன் நீதான்..
உயிர் கொடுக்கும் காற்றையும் ...
உணவான சோற்றையும் ...
தந்தது நீதான்..
உலகின் மூன்று பக்க கடலும் நீ..
மீதி பக்க நிலமும் நீ..
உண்மையின் பொருளும் நீ ..
இறைவனின் அருளும் நீ..
உன் அழகை கணக்கிட இல்லை ஒரு கணினி ..
உன்னை தவிர வேறு செயற்கையை தேடாது..
என் கண் இனி..