களங்கம் இல்லையேல் அழிவில்லை

கவிதை படித்து வந்த
சந்தனத் தென்றல்
கண் கலங்கி நின்றது
கடல் அலைகள் கண்டு...!

கைகள் அசைத்து வீசி
மகிழ்ந்த மரங்கள்
கண் கலங்கி நின்றது
கோடரியைக் கண்டு ...!

ஆசை ஆசையாய் வானம் தொட
பறந்து வந்த பறவைகள்
கண் கலங்கி நின்றது
மேகங்களின் கருமை கண்டு..!

ஆசையாக மோதிய மேகங்கள்
விண்ணைத் தொட மறந்து
கண் கலங்கி நின்றது
மண்ணைத் தொட முடியவில்லை என..!

ஆசையாகப் பெய்த மழை
மண்ணோடு கலந்த பின்னும்
கண் கலங்கி நின்றது
விண்ணைத் தொட முடியவில்லை என ...!

பாடிப் பாடி மகிழ்ந்த
குயில் மைனா இனங்கள் எல்லாம்
திசையைத் தேடி தேடி
பாதை கண்ட பின்னும்
கண் கலங்கி நின்றது
எல்லை தெரிந்து விட்டதே என்று...!

ஆசையாகப் பெற்ற கன்று
தன் (பசு ) பால் மடியைத் தேடித்தேடி
முட்டி மோதி பாசத்துடன்
துள்ளி சூப்பி மகிழ்ந்ததும்
கண் கலங்கி நின்றது
நீயும் என்னைப் போல
சுமையாவாயோ என்று...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (10-Aug-13, 10:38 am)
பார்வை : 156

மேலே