குழந்தைகள்!

குழந்தைகள்
பிரம்மனின் பிரதிகள்!
அழகின் சிகரம்!
அவர்கள் அவர்களாக
இருக்கும் போது
அவர்களின் பிரபஞ்சம்
அழகானது!

உங்கள் குழந்தை
உங்களின் உடைமயுமல்ல
அடிமையுமல்ல!

அவர்களை அவர்களாக
இருக்கவிடுங்கள்
யார் போலவும்
ஆக்க முயலாதீர்கள்
தோற்று போவீர்கள்!

ஒவ்வொரு
குழந்தையும்
தனக்கான உலகத்தை
தானே உருவாக்கி கொள்ளும்
நீங்கள் வீணாக
முயன்று விரக்தி அடையாதீர்கள்.

ஒப்பிட்டு பேசி
அவர்களின் உணர்வுகளை
ஊனப் படுத்தாதீர்கள்!

உங்கள் குழந்தை
என்னவாக வேண்டும்
என்று நீங்கள்
ஆசைபடுவது தவறல்ல
ஆனால் நீங்கள் ஆசைபடுவதை போல
ஆகவேண்டும் என்று
வற்புறுத்தாதீர்கள்

அது
அவர்களின் கனவுகளை
காயப்படுத்தும்!

குழந்தைகளின் தவறுகளை
கண்டியுங்கள்
தவறியும்
அவர்களை
தண்டிக்காதீர்கள்!

பிழைகளை கண்டியுங்கள்
பிள்ளைகளை
தண்டிக்காதீர்கள்!

உங்கள் குழந்தைக்கு
முடிவெடுக்க
கற்றுகொடுங்கள்
நீங்கள் முடிவெடுக்காதீர்கள்!

சுதந்திரத்தை
அனுபவிக்கும் குழந்தை
கட்டுப்பாட்டை
தக்க வைத்துக் கொள்ளும்!

குழந்தையிடம்
பேசத் தெரியாதவர்கள்
சிலைகளிடம்
சிலாகிக்கிறார்கள்!

ஒவ்வொரு
குழந்தையும்
சொர்கத்தை
சிரிஷ்டிக்கிறது

சில மூடர்கள்
ஏனோ
அதை ஆகாயத்தில்
தேடுகிறார்கள்!

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (13-Aug-13, 11:59 am)
பார்வை : 72

மேலே