அதற்குள் அவசரமென்ன

மேன்மிகு பாரதம் ஆடிக் கலைத்துவிட்டீரோ
மேற்கத்திய நடனம் பயிலச் செல்கிறீர்
தேன்மிகு தமிழில் புலமை பெற்றீரோ
தெரியாத மொழியில் இல்லக்கணப்பிழை சொல்கிறீர்

பழங்கால உணவுதின்று பசியடங்கி விட்டதா
பன்னாட்டு உணவுகளின் ருசிதேடி போகிறீர்
முழங்காலுக்கு கீழ் முரடாக தேய்த்ததுண்டோ
முன்னால் இருப்பவரை அசுத்தம் என்கிறீர்

இல்லாத ஒருவர்க்கு இரண்டுரூபாய் கொடுத்ததுண்டோ
இந்தியாவின் வறுமையை ஒழிப்போமென இரைச்சலிடுகிறீர்
தள்ளாடும் முதியவருக்கு தானமொன்று செய்ததுண்டோ
தானே வள்ளலென தம்பட்டம் தட்டுகிறீர்

உள்ளூர் என்று உளமாற நேசித்ததுண்டோ
உனதில்லா வெளிநாட்டை உயர்வென உரைகிறீர்
உள்ளத்திற்குள் உன்தாயை வைத்து பார்த்ததுண்டோ
உன்னொருவளை அவ்விடத்தில் வைத்து புகழ்கிறீர்

கன்னுக்குட்டி பசியடங்கியபின் பால் கறந்ததுண்டோ
காளைமாட்டை கடவுளென கைகூப்பி தொழுகிறீர்
கண்ணியமாய் ஒருநாளேனும் நடந்தது உண்டோ
கடமையை முடித்தேனென கழுத்துக்குபின் கைகோர்க்கிறீர்

கள்ளமில்லா உள்ளமொன்று பிள்ளைபோல் உண்டோ
கடவுளவன் எங்கேஎன காசுபணம் கரைகிறீர்
உள்ளதென்று உண்மையை உள்ளமறிந்து உரைத்ததுண்டோ
உன்னால் நேர்ந்ததென உன்னொருவனை பழிக்கிறீர்

சில்லென்ற தென்றலின் னிசை செவியுற்றதுண்டோ
சினிமாப் பாடல்களை சிறுநாக்கில் முனுமுனுக்கிறீர்
தள்ளென்று மண்பிளந்த தாவரத்தை ரசித்ததுண்டோ
தளிறொன்ரை பறித்து தலைசூட விரும்புகிறீர்

வானத்தை ஒருநாளேனும் வியந்து பார்த்ததுண்டோ
வானவில்லை மட்டும் எங்கனம் ரசிக்கவந்தீர்
சினத்தை ஒருநாளேனும் சிறிது தள்ளியதுண்டோ
சிரிக்கவைக்கும் பொருளென்ன சிறிதொரு தேடல்செய்கிறீர்

மனதிலுள்ள அழுக்கை சுத்தம் செய்ததுண்டோ
மற்றஇடத்தில் அரக்க தேய்த்து குளிக்கிறீர்
மனமுள்ளவனை மனிதனாக நின்று மதித்ததுண்டோ
மானமுள்ளவன் நானென மார்புதட்டி சொல்கிறீர்

சிறகடிக்கும் பறவையை நின்று ரசித்ததுண்டோ
சிறகில்லா விமானத்தில் சென்றுவர விரும்புகிறீர்
இரவுநிலவை தூங்கும்முன் ஏங்கிப்பார்த்ததுண்டோ
இராட்சதன் கனவிலென இடையினில் எழுகிறீர்

தேன்குறையாப் பூந்தமிழில் பாட்டெழுதிக் களைத்தீரோ
தெளிவுபெறா பாசைகளில் பாட்டெழுதிக் குழப்புகிறீர்
இந்நாட்டு கடனெலாம் இல்லயெனுமளவு அடைத்தீரோ
வெளிநாட்டுக்கு வேலைசெய்ய விசுக்கென பறக்கிறீர்

படித்தற்கு நன்றி நண்பர்களுக்கு...

============================= சரவணா

எழுதியவர் : சரவணா (14-Aug-13, 1:43 am)
பார்வை : 90

மேலே