பொறுத்தருள் தேவி...

காந்தி நேரு நேதாஜிபோல்
கண்ணியம் மிக்கோர் தியாகமது
ஈந்த திந்த சுதந்திரமே,
இன்று நிலவும் தரித்திரமே,
வேந்த ராக வந்தவரும்
வெண்ணெய் வெட்டி சிப்பாய்களே,
பேந்த விழிக்குது பாரதமே,
பொறுத்திரு தேவி சுதந்திரமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Aug-13, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே