எனக்கு இரண்டாம் தாயுண்டு !

நான் தவழும் மாதத்திலே நீ
நடக்க நான் பார்கிறேன்
என்று என் கையை பிடித்து
என்னையும் நடக்க வைத்த
அன்னை அவள்

பள்ளி பருவத்திலே எழுத
தெரியா வயதிலே
தமிழ் மொழியில் முதல் உயிர்
எழுத்தாம் "அ" என்பதை
எழுத கற்று கொடுத்த
ஆசான் அவள்

தோல்வி கண்டு துவண்டு
விட கூடாது பெதும்பை பருவத்திலே
என எண்ணி என்னை தாங்கி கொண்ட
தோழியும் நீதான்

மங்கை பருவத்திலே மனதில்
தோன்றும் குழப்பங்கள் அனைத்தையும்
கலைத்து எனக்கு வழி காட்டிய
வழிகவலனும் நீ தான்

18 வயதில் தோன்றி மறையும்
துன்பங்களை எனக்காக தூக்கி
சுமந்த சுமைதாங்கியும்
நீ தான்

படைக்கும் கவியும் அவள் பெயர் சொல்லும்
படைப்பின் கரு பொருளும் அவள்தான்
எனக்கு இரண்டாம் தாயும் அவள்தான்

எந்நாளும் என்னை மறவா உன்னை
என்றும் நான் மறவேன் தோழியே

என்னை கருவில் சுமந்து பெற்ற
என் அன்னை என்னை இப்பொழுதும்
நினைக்கிறாள் என் வாழ்க்கையை
எண்ணி

நான் இப்பொழுதும் நினைகிறேன் எனக்கு இரண்டாம் தாய்
நீ தான் என எண்ணி


*****இப்படைப்பு என் தோழி கவிப்ரியா விற்காக ****

எழுதியவர் : ப்ரியாஅசோக் (16-Aug-13, 4:01 pm)
பார்வை : 71

மேலே