சர்தார்ஜி ஜோக் (வழக்குச் சொல்லாக மட்டும்) (சர்தார்ஜிகள் மன்னிக்கவும்)

ஒரு பெரிய மாநிலத் தலைநகரின் புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு துயரச்செய்தி.

அச்செய்தி யாதெனில், இராமேஸ்வரம் தீர்த்தயாத்திரைக்கு செல்ல விரும்பிய 100 சர்தார்ஜிகளைக் கொண்ட ஒரு குழுவில், 99 சர்தார்ஜிகள் இராமேஸ்வரம் செல்லும் புகைவண்டியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அதில் மீதி உள்ள ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கிறார்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட அனைத்து மீடியாக்களும் அடுத்த நிமிடம் அங்கு குவிந்தனர். உயிருடன் உள்ள ஒரு சர்தார்ஜியை, என்ன நடந்தது? என்று கேள்விக்கணைகளால் துளைத்தனர்.

அதற்கு அவரும் அழுதுகொண்டே பதிலளிக்கலானார்.

நாங்கள் அனைவரும் வடநாட்டிலிருந்து இராமேஸ்வரம் செல்வதற்காக இங்கு வந்தோம். சிறிது நேரத்தில், ஒலிபெருக்கியில் கீழ்க் கண்டவாறு அறிவிப்பு வந்தது.

"இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஒன்றாவது நடைமேடையில் வந்துகொண்டிருக்கிறது" என்ற அறிவிப்பினால் என்னைத்தவிர, என் குழுவிலிருந்த அனைவரும் ஒன்றாவது நடைமேடையிலிருந்து, ஒன்றாவது தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது, தண்டவாளத்தில் வந்த இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்னவர்கள் அனைவரின் மேலேறி, அவர்களைக் கொன்றது என்று சோகத்துடன் கூறினார்.

உடனே நிருபர்கள், நீங்கள் மட்டும் ஏன் நடைமேடயிலேயே இருந்தீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவரும், நான் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் இருந்ததால் தண்டவாளத்திற்கு குதிக்காமல், நடைமேடயிலேயே தங்கினேன் என்றார் மிகுந்த சோகத்துடன்.....

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (18-Aug-13, 7:27 pm)
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே