உள்ளத்தின் காதல் , உயிர் பெறுமோ எனைஏற்று

காதல்
இதில் நானும் விதிவிலக்கல்ல ...!
உள்ளத்தின் உணர்வுகள்
சொல்லும் மொழி அல்ல இது
உணர்ட்தவன் மட்டுமே
அதை எண்ணி உறுகும் மொழி ...!

என் கதையும் அப்படித்தான்
என்னால் அவளிடம் அனைத்தையும்
பகிர்ந்துகொள்ள முடியும்
எனதன்பை தவிர ...?

மீளும் அவள் மனது
என்னால் வருந்தக்கூடாது
அதனாலே
அவள் மன பாரத்தை குறைகிறேன்
என் மனதில் ஏற்று
அவளுக்காக ...!

சொல்வது எளிது
ஆனால்
அது அர்த்தமற்ற சொற்களாகி விடுமோ
என ஐயம் ...!

என்றும்
அவள் நிழலாய்
இருக்கவே விருப்பம்
என் மனம் புரிந்து கொள்ளவில்லை என்றாலும்
அவள் மனம் புரிந்துகொண்ட நான்
அவளுக்காக காத்திருப்பேன்
என்றும் அவள் நினைவாக ...?

எழுதியவர் : தமிழ் இனியன் (19-Aug-13, 7:52 pm)
பார்வை : 100

மேலே