சுய நலம் கோடி !

பரந்து விரிந்த பூமியில் இன்னும்
மனிதன் மனது விரியவில்லை

தனக்கு மட்டும் என்ற எண்ணம்
தன் தாழ்வு மனதில் கொள்ளை

பலர் பருவ வயதில் தெரியும்
குணத்தின் நிலை நன்கு புரியும்

இன்னும் வளர்ந்து வந்த பிறகு
சிலர் வறட்டு குணமும் அறியும்

வளர்ப்பு நிலை கொண்டு பலர்
வாழ்வின் உயர்வு அமையும்

இறப்பு வரை மாறாத செயல்கள்
சில இழிவு கொண்டோரிடம் உண்டு

நம்மில் வளர்ந்து வரும் சிலரை
கண்டு வாழ்த்த மனமில்லை நாம்

வளர்ந்திடுவானோ ! இந்த எண்ணம்
உள் மனதில் ஓயாத தொல்லை

தன் உறவு மட்டும் மேன் பட மனதில்
பலரை பகையாக்க சூழ்ச்சி ஏழும்

நம் நாக்கு ஏப்போதும் மாற்றி பேச
நம் செயல் இதில் ஓயவில்லை

குடும்ப விழாக்களில் பங்கெடுப்பு –இது
இறுதியில் மிஞ்சும் முகம் சுளிப்பு

விட்டு கொடுப்பதை விட நமக்கு
விடா பிடித்தான் மிக அதிகம்

சொத்து கொண்ட குடும்பத்தில் என்றும்
சூழ்ச்சி போடும் வேஷம் தாராளம்

என் குடும்பம் என் மக்கள் இது
சுய நலத்தின் படிக்கற்கள்

எல்லாமும் இனி எல்லோரும் இது
சிறந்த பண்பின் வெளி காட்டல்

இறைவனை முழுமையாய் அஞ்சினாலே
இம்மை வாழ்வின் ஆசை போகும்

மறுமை வாழ்வை நினைத்து வாழு
மனதும் கூட இன்னும் புனிதமாகும்

அமல்கள் கோடி நிறைவாய் செய்து
அமைப்போம் வாழ்வை இறைவனை நாடி !


கவிஞன். இறையடிமை.

எழுதியவர் : கவிஞன். இறையடிமை (19-Aug-13, 9:13 pm)
பார்வை : 69

மேலே