மாயங்கள் செய்தோம்

தனக்கு மட்டும் இல்லை தன்னை
சார்ந்தவர்களுக்கும் தேவை என

உவமையாய் பொய்யை கூறி பலரை
பகையாக்க மனதில் கணக்கு கோடி

இருப்பவனிடம் கறந்து தின்ன கூட்டம்
ஒண்ணு இருக்குது இங்கே

புகழ்ந்து விழுந்து பாடி இன்னும்
நய வஞ்சகமாய் நாடகமாடி

இன்னும் உறவுகளை பகையாக்க்கி
உரிமைக்கு முட்டு கட்டை போட்டு

உடன் பிறப்பின் பாசத்தையும் – இனி
வெட்டி விடும் ஒட்டு மொத்தமாக

தாயமும் , தந்திரமும் தொடங்கி -இது
அது மாயமும் , மந்திரமும் ஆகி

தன்னிடம் மட்டுமே உறவாட வேண்டி
திரளாக ஒரு கூட்டம் துனியாவில் !

மனிதனை மாயம் செய்ய என்னும்
மட்டமான செயலை செய்யலாமா ?

சிந்தியுங்கள் ! தெளிவு பெறுங்கள் !
திருமறையில் வசனம் உண்டு !

கவிஞன். இறையடிமை

எழுதியவர் : கவிஞன். இறையடிமை (19-Aug-13, 9:19 pm)
பார்வை : 70

மேலே