தட்டான்

ஏ ஹெலிகாப்டரே,

நீ என்ன, இத்தாலிய பேரத்தில் சிக்கியவனா!
அல்லது
உத்தர்காண்ட் பேராபத்திலிருந்து மக்களைக் காத்தவனா!

நம்நாட்டு இராணுவப் படையைச் சேர்ந்தவனா!
அல்லது
எதிரி நாட்டு உளவுப்பிரிவில் உள்ளவனா!

படம்எடுக்கப் பயன்படுத்தும் ஹெலிகாம் வகையா!
அல்லது
அரசியல் வாதிகளை சுமந்துவரும் சூப்பர்வகையா!

என்ன, பதிலே பேசாமல் பறந்துகொண்டிருக்கிறாய்...

ஓ, தட்டானா நீ! அதனால் தான்
பட்டனைத் தட்டாமல் பதமாய் பறக்கிறாய்!

பற பற, பறக்கும்போது கூடவே
எங்கள் இளைய சமுதாயத்தினருக்கும் பயிற்சிகொடு

ஏனெனில், அவர்களும் இருளுக்கு முன்னர்
அடையவேண்டிய தூரத்தை, சிரமமின்றி கடப்பதற்கு...

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (20-Aug-13, 12:27 am)
Tanglish : thattan
பார்வை : 128

மேலே