உலகம் எங்கே செல்லுகிறது ?

பசித்தவனுக்கு பால்
புசித்தவனுக்கு நெய்
பசியாதவனுக்கு கஞ்சி
இது தான் நியாயம்.
இவ் வழியில் செல்லும்
உலகில் தர்மம் எங்கே?

அடிப்பவனுக்கு எல்லாம்
அடித்தவனுக்கு யாவும்
அடியாதவனுக்கு ஏதுமில்லை
இது தான் நடப்பு.
இம் முறையில் செல்லும்
உலகில் சட்டம் எங்கே?

பணக்காரன் பணக்காரனாகிறான்
அரசியல்வாதி பெரும் புள்ளியாகிறான்
ஏழை என்றுமே ஏழையாக இருக்கிறான்.
இது தான் வாழ்க்கை
இது தான் இயல்பு
இம் முயற்ச்சியில் செல்லும்
உலகில் செழிப்பு எங்கே/

எழுதியவர் : மீனா சொமசுண்டராம் (20-Aug-13, 12:27 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 77

மேலே