தமிழீழத்துப் போர் கால எல்லைக் காதல்

தமிழீழத்துப் போர் கால எல்லைக் காதல்

(ஆ) என் மண் காக்கும் தேவதையே
என்னையும் சற்று நோக்கடியே
இம் மண்னைப் போல் என்றும்
உன்னை காப்பேனடி எனுயிரே,,

என் மண் காக்கும் தேவதையே
என்னையும் சற்று நோக்கடியே.....

(பெ) ஈழ மண்னின் புதல்வனே
இம் மண்னின் மைந்தனே
தமிழீழத்தைக் காக்க நாம்
நம் சாவை நோக்கியுள்ளதை - உணர்ந்திடு
என் ஈழத்து மைந்தனே - உணர்ந்திடு
என் ஈழத்து மைந்தனே
நம் தேசத்தின் எல்லையைக் காத்து மீட்க
நம் வாழ்க்கையின் எல்லையிலுள்ளோம்
என உணர்ந்திடு வேந்தே....

இம் மண்னின் மைந்தனே
உணர்ந்திடு ஐயா உணர்ந்திடு

(ஆ) உன் மனதை இருக்கி கலாக்காமல் (கல் ஆக்காமல்)
சாந்தமாகக் கேட்டுப் பாரடி
என் மனம் புரியும் உமக்கு

(பெ) அட என் மண்னின் மைந்தனே
மனதைக் கேட்க வேண்டுமடா
இவ் உடலும் உயிரும் தமிழீழம் தானே
என் ஈழத்து மைந்தா மனம் தளராமல்
களமாடி நம் தேசத்தை மீட்டதும்,,,,,,
காண்போம் ஐயா

(ஆ) எம் தமிழீழ தேவதையே
ஏனடி இக்குழப்பம் எனக்கு

எதிரியின் சூழ் சமரையும் அறிந்து
சிதரவைத்த என் அறிவோ உன்
மனதின் இச்சூழ் சொலால் சிதறுதடி
என் கண்னே

(பெ) போர்களத்தையே வாழ்விடமாக
கொண்ட என் வேந்தே போர்களம்
கண்ட உனக்கு பெண் மனதைக்
களமாட பயிச்சி வேண்டும் ஐயா

(ஆ) அடிப்பெண்னே உன்னை
கண்டதும் புரிந்ததடி பெண்களின்
மனம் போர்களத்தின் யுத்தியை
விட கடினமென்று

வீன் வாதம் ஏனடி "சரி"
என்றுச் சொல்லடி என்
ஈழ தேவதையே இவ்
ஈழத்தை மீட்கும் வரை
நான் காத்திருப்பேனடி
உன் கரம் பிடிக்க,,,,,,,,,

(பெ) என் மண்னின் மைந்தனே
என் மனதை புரிந்துக் கொள்ளடா
இவ் உடலும் உயிரும் இத்தமிழீழம் தானடா

இத் தமிழீழத்தை மீட்டதும்
அனைத்தையும் அடைவாயே
என் ஈழத்து வேந்தே

(ஆ) போதுமடி,,,,,,,,,போதுமடி என் தேவதையே
நம் தமிழீழத்தைக் காப்பதுப் போல்
என் இதயத்தில் என்றும் உன்னைக்
காப்பேனடி என் ஈழத்தின் வீர வேங்கையே

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (20-Aug-13, 12:39 pm)
பார்வை : 90

மேலே