சண்டை

கணவன் மனைவிகுள்ளே தினம் சண்டை தான்.ஏதோ சில காரணம்,காரணமில்லாமல் சண்டை இருக்கத்தான் செய்தது. நண்பர்கள் சிலர் மருத்துவ ஆலோசனை செய்துபாருங்கள் என கூறினர்.

கணவனும் மனைவியும் மருத்துவரை அணுகினர்.மருத்துவர் அவர்களை அமர வைத்தார்.என்ன பிரச்சனை என விசாரித்தார்.ஒருவர் பற்றி ஒருவர் மாறி மாறி குறை கூறினர்.அவர்கள் கூறியவை அனைத்தையும் அமைதியாக கேட்டார் மருத்துவர்.

பின்பு, இருவருக்கும் காகிதத்தை கொடுத்து, என்ன குறைகளை கூறினார்களோ அதை எழுதி தருமாறு கேட்டார். பரிச்சையில் நமக்கு தெரிந்த கேள்வி கேட்டிருந்தால் எந்த அளவு ஆர்வத்துடன் பதில் எழுதுவோமோ அந்த மாதிரி பக்கம் பக்கமாய் எழுதினர்.

அதை மருத்துவரிடன் கொடுத்தனர்.அவர்கள் எழுதியதை படிக்காமல் வைத்துவிட்டார்.மீண்டும் அவர்களிடம் காகிதத்தை கொடுத்து, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு, நீங்கள் மகிழ்ச்சியான உணர்ந்த தருணங்கள்,பிடித்தவை ஆகியவற்றை எழுதச் சொன்னார்.

இருவரும் எழுதிக் கொடுத்தனர். அவற்றை வாங்கி ஒருவர் எழுதியதை மற்றொருவர் படிக்குமாறு சொன்னார். கணவன் மனைவி எழுதியதை படித்து முடிக்கும்போது நெகிழ்ந்து போனார்.அதே நிலையில் மனைவியும் இருந்தார். இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருந்தனர்.அது அவர்களின் மனோநிலையை மாறச் செய்தது.

"நாம் எப்போதும் சிறிய தவறுகளை பெரிதாக்கி,அவற்றின் கூடவே பயணிக்கிறோம்.அதை சுற்றியே மனம் செல்வதால், மற்றவர் காட்டும் அன்பை புரிந்துகொள்வதில்லை."

எழுதியவர் : கேட்டது (21-Aug-13, 12:04 pm)
Tanglish : chandai
பார்வை : 224

மேலே