அய்யோ பாவம்....கருணாநிதி...! இப்ப என்ன செய்வீங்க....? இப்ப என்ன செய்வீங்க..!

மருத்துவர் ராமதாஸ் அனைவரையும் ஓவர் டேக் செய்து விட்டார் என்று கருதலாமா...?
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்....
எனவே, உத்தமர் வேடம் போட முயலும் இராஜபக்சேவுக்கு இந்தியா எந்த வகையிலும் துணை போகக் கூடாது. மாறாக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
1) காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது.
2) வரும் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நட்பு நாடுகள் மூலமாக கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
3) இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
4) இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் ஒன்றாக வாழ வாய்ப்பே இல்லை என்பதால், தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து, அதை தமிழீழமாக அறிவிப்பது குறித்து ஐ.நா.மன்றத்தின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார்..?
விஜயகாந்த் அவர்களும் தன் பங்கிற்கு இலங்கையை நட்பு நாடு என்று கூற முடியாது என்று கூறிவிட்டார்...
ஆக டெசோ பாய்ஸ்கள் நிலை கொஞ்சம் கஷ்டம்தான்...பார்ப்போம் யார் யாரை முந்துகிறார்கள் என்று....
சங்கிலிக்கருப்பு