திருவாரூர் இலக்கிய விழாவில் ஆ;.நல்லக்கண்ணு பேசியவை...! எல்லாம் சரி....ஆனால்...?

நேரு காலத்தில் ஐந்து ஆண்டு திட்டம் போட்டார். நாடு வளர்ந்தது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்படி செய்தார்.

மத்தியில் இன்றைய நிலை என்ன...? சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் ஜாதிய சண்டைகள், மதக் கலவரங்கள், எல்லையில் மோதல் தொடர்ந்து நடைபெறுகின்றது.

அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் எல்.ஐ.சி. போன்ற முக்கிய நிறுவனங்களை வெளிநாட்டுக்காரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டு வருகின்றது. தண்ணீர்கூட இன்னும் கொஞ்ச நாட்களில் தனியார் வசம் போய்விடும் போல தெரிகின்றது.

நமது நாட்டின் பிரதான தொழில் விவசாயம். அந்த விவசாய தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு வாருங்கள் என்று பிரதமர் கூறுகின்றார்.

இதற்கு ஒரு பிரதமர் தேவையா...? எதை எடுத்தாலும் தனியார் மயம் என்றால் இந்திய மக்களின் நிலை என்ன ? பாரத பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் போகின்ற போக்கை பார்த்தால் நமது நாட்டை கொண்டுபோய் அடகு வைத்து விடுவார்கள் போல தெரிகின்றது. மீண்டும் நமது நாட்டை அடிமை நாடாக போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

ஒரு காலத்தில் ' யாதும் ஊரே யாவரும் கேளீர் ' என்ற பழமொழி. இப்போது " நீ யாரோ.... நாங்கள் யாரோ " என்ற பழமொழியாக உள்ளது. என்று இவ்வாறு பேசினார்.

சரிதான் நீங்கள் சொல்வது என்று வைத்துக் கொள்வோம்...ஆனால், மதக் கலவரம் நடக்கும் போதெல்லாம் சும்மா நின்று வேடிக்கைப் பார்த்தீர்களே....பொழுதனைக்கும் கோபாலபுரத்திற்கும் போயஸ் கார்டனுக்கும் அலைந்து திரிந்தீர்களே...?

காமராஜர் சரி..எளிமையாக இருந்தார் எங்கு இருந்தார்..? காமராஜர் காலத்தில் தான் அந்த கட்சி எப்படியெல்லாம் சுருட்டலாம் என்று நாலுகால் பாய்சலில் பாய்ந்தது அந்த பெருச்சாளிகள்
கட்சியில் ...

வேலை இல்லை எனவே மரம் வளர்த்து வயிற்று பசியை போக்கிக் கொள்ளுங்கள் என்று கருவேல...முள்வேலி கருவையை ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்து இன்று தமிழகம் முழுதும் நீக்கமற வளர்ந்துள்ளது....
இவரைப்போலவே கக்கன் இவர்களின் எளிமை அனைத்தும் மங்கிப் போக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிர் பிழைக்க உதவின....

இவர்களை விட்டுத் தள்ளுவோம்...காங்கிரஸ் கட்சிக்காரர்கள்... அந்தக் கட்சிக்கு பன்முகம் கொண்டவர்கள் தேவைப்பட்டார்கள்....
இருந்தார்கள்...போனார்கள்...!

உங்களின் கட்சி இடதுசாரி கட்சி...? அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி... விடுதலைப் புலிகளை உங்கள் அளவிற்கு எதிர்த்தவர்கள் இந்த உலகிலேயே இல்லை... தமிழர்களுக்கும் இல்லாமல், இந்தியர்களுக்கும் இல்லாமல், ஏன்..சர்வதேச சமூகத்திற்கும் இல்லாமல் ஒரு பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்குறீர்களே...? இதை என்னவென்று சொல்வது...

விடுதலைப்புலிகள் வீரமும்..அவர்களின் நியாயமான போராட்டமும் கோரிக்கையும்....
உலகத் தமிழர்கள் அனைவரின் விருப்பமும் என்று ஒன்று சேர்ந்ததையும் பொருட்படுத்தாமல்....
அதாவது புறச் சூழலை கருத்தில் எடுக்காமல்....
வெளிநாட்டு கொள்கையில் ஆதரவு... உள்நாட்டு கொள்கையில் எதிர்ப்பு என்று புதிய வாய்ப்பாடுகளை சொல்லி....

எவ்வளவோ இருக்கிறது இன்னும் சொல்ல.....

சரி இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை.....இன்று இந்தியாவிற்கு வெளிநாட்டுக் கொள்கையும் ஒன்றுதான்..
உள்நாட்டு கொள்கையும் ஒன்றுதான்...அது எந்த அரசு அமைந்தாலும்....

இந்திய அரசை தூக்கி எறிவோம்....மக்கள் அரசை நிறுவுவோம்... அதாவது புரட்சி செய்வோம் வாருங்கள் என்று அழைப்பு விட முடியுமா...?

அது ஒன்று தான் இருக்கும் 140 கோடி மக்கள் தொகையில் 138 கோடி மக்களுக்கு நேரடி பயனைக் கொடுக்கும் என்று சொல்கிறார்கள், சதா கம்யூனிஸ்ட் புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர்கள்....

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Aug-13, 3:34 pm)
பார்வை : 109

சிறந்த கட்டுரைகள்

மேலே