தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் - தமிழக அரசு....! இதைத்தான் சொல்வது எதிர்வினை என்று..?

2003 - ஆம் ஆண்டு மே மாதம் 20 - ம் தேதி அதிகாலையில் நடைபயிற்சியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்...இந்த கொலை வழக்கில் மு.க.அழகிரி முதல் எஸ்ஸார் கோபி வரை சுமார் 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டன..
இந்த வழக்கு மதுரை செசன்ஸ் கோர்ட்டில் நடந்த கொண்டிருந்த பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு வந்ததும் 2006 - ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்துக்கு மாறியது...பின் அனைவரும் எதிர்பார்த்தது போல முதல் குற்றவாளி மு.க.அழகிரி முதல் 13 - வது குற்றவாளிகள் வரை உள்ளவர்கள் அனைவரும் சித்தூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்....
அப்படியென்றால் தா.கி.னாவை யார் வெட்டிக் கொன்று இருப்பார்கள்...? என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்காத காரணத்தால், ஜெ. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மு.க.அழகிரி அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது....என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்...!
பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் அரசு சாட்சியாக அனுமதிக்க / சேர்க்க வேண்டும் என்று திமுகவின் தலைவராக வர வேண்டிய மூத்த திமுகவின் க.அன்பழகன் அவர்கள் மனு செய்து அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி அளித்தது....
அதற்கு இதுவா..? இதற்கு அதுவா என்பது போல, நீ அந்த கேசில் வாபஸ் வாங்கு...நான் இந்த கேசில் வாபஸ் வாங்குகிறேன் என்று இனிமேல் பேசுவார்களோ..? இருவரும். அல்லது மீண்டும் காங்கிரஸ் மத்தியில் வந்தால் பெங்களூரு கேசில் திமுக எதிர்பார்க்கும் முடிவு கிட்டிவிடும் என்ற பெரு நம்பிக்கையும்....
ஒருவேளை பாஜக தலைமையில் ஜெ. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துவிட்டால் அழகிரி அவர்களை தேர்தலிலேயே நிற்க விடாமல் தண்டனை வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற பெரு நம்பிக்கையும் என்று இருக்குமோ...? என்று கேட்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு