அனைத்தும் நடத்துபவன்

கற்றது நிறைய என்று இறுமாந்தேன்
கல்லாதது அதை விட கூட என்று அறிந்தேன்
செய்தது குறைய என்று உருகினேன்
செய்யாதது அதை விட கூட என்று தெளிந்தேன்
நினைத்தது அதிகம் என்று புலம்பினேன்
நினையாதது அதை விட கூட என்று தெரிந்தேன்
வாழ்ந்தது சிறப்பாக என்று மகிழ்ந்தேன்
வாழ்த்துவது அதை விட சிறப்பு என்று உணர்ந்தேன்
எண்ணங்கள் நல்லதாக இருக்கும் என்று நம்பினேன்
எண்ணாதது அதனை விட நன்மையாக இருக்கலாம் என்று அடங்கினேன்
நலன்கள் பல மலர வேண்டும் என்றி விரும்பினேன்
நலன்கலலாலது தோன்றாமலே இருத்தல் வேண்டும் என்று ஆர்வப்பட்டேன்
புனையும் கவி சாகா வரம் பெற வேண்டும் என்று கனாக் கண்டேன்
புனையாத பல வரிகள் ஏட்டில் ஏற வேண்டும் என்று முற்பட்டேன்
.
வேண்டும் வேண்டாம் என்று சொல்ல நான் யார்?
அனைத்தும் நடத்துபவன் யாரோ?

எழுதியவர் : மீனா Somasundaram (25-Aug-13, 9:40 am)
பார்வை : 74

மேலே