இதுலயுமா .... உங்க .... இனவெறி .....
களம் 1
தில்லியில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகிறாள் ..ஊடகங்கள் வரிந்துகொண்டு ... வெளிப்படுத்துகின்றன .. போராட்டங்கள் நாடுமுழுதும் வெடிக்கின்றன அரசியல் தலைவர்களின் கண்டனங்கள் மொய்க்கின்றன .. புதிய சட்டங்கள் இயற்ற படுகின்றன . எல்லோரும் ஊடகம் ஏதோ சமூக அக்கறையோடு செயல் பட்டதாகவே கருதினர்.
களம் 2
திருச்சியில் 13 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிறாள்
ஊடகம் அதனை பற்றி பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை மாறாக அது ஏதோ ஒரு கலாச்சார சீரழிவின் பிம்பம் போலவும் தற்கொலை போலவும் சித்தரிக்க முயல்கிறது எந்த அளவிற்கு என்றால் குடும்பத்தினர் துண்டு பிரசுரம் மூலம் நீதி கேட்கும் நிலையில் தள்ளப்படுகிறது .
களம் 3
ஒரு பெண் மாற்று சாதி பெண்ணுடன் உடன்போக்கு கொள்கிறாள் ..
ஒரு சாதிகலவரத்தில் உயிருடன் அப்பாவிகள் தீயிட்டு கொளுத்த படுகிறார்கள் ஊடகங்கள் இந்த மனிதஉரிமை மீறலுக்கு எதிராக குரல் எழுப்பாமல் காதல் திருமணம் பற்றியும் அதில் தெரியும் மனித உரிமை பற்றியும், அந்த பெண்ணை பற்றியும் பேசி பேசியே மக்களை திசை திருப்பின .
களம் 4
சாதி வெறியர்களின் அலைகளிப்பால் மர்மமான முறையில் இறந்த ஒரு வாலிபரின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடக்கிறது வழக்கம் போலவே ஊடகங்கள் கொலையா தற்கொலையா என்று பட்டிமன்றம் நடத்தி ஆட்சியாளருக்கும் அதிகார சாதியினருக்கும் மிக நியாயமாக தன் ஊடக நீதியை நிலை நிறுத்தியது.
களம் 5
மும்பையில் ஒரு புகைப்பட நிருபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள் மீண்டும் ஊடகங்கள் கொந்தளிக்கின்றன .
மேற்காணும் களங்களில் ஊடகங்கள் கடைபிடித்த நியாயமும் நீதியும் அவர்களின் ரெட்டை நிலைப்பாடும் வெட்ட வெளிச்சமாகின்றன.
ஏன் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் ஊடகமே நீ குரல் கொடுப்பாயா ..? அல்லது உன்பார்வையில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும்தான் கற்பு சொந்தமா ..?
திருச்சி மாணவி விசயத்தில் அச்சிறுமிக்காக ஏன் குரல் கொடுக்க வில்லை ?.
ஆளுங்கட்சியின் அனுமதி கிடைக்க வில்லையா .? அல்லது அது தேசத்தில் உன்னால் தனிமை படுத்தப்படும் ஒரு இனத்தை சார்ந்தவளின் பிரச்சனை என்பதால் கண் மூடினாயா ..?
எப்படி உன்னால் இவ்வளவு சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள முடிகிறது ..? .ஒரிசாவில் இனக்கலவரத்தில் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகுகையில் ,குஜராத் கலவரத்தில் கூட்டு வன்புணர்வுக்கு பெண்கள் ஆளாகுகையில் மயக்கத்தில் இருக்கும் நீ, மறக்காமல் மலாலா தினம் கொண்டாட விழித்து கொள்கிறாய் ...!
சிறிதும் சமூக அக்கறை இல்லாமல் உன் இனவெறிக்கும் பணவெறிக்கும் இந்த ஊடகநீதியை வளைக்கும் பதரே...! உன் சகோதரிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால்தான் அதன் வலி தெரியும் .
வெறும் நதிகளை மொழிகளை மற்றும் மண்ணை மட்டும்தான் நீ தாயாக பார்ப்பாயா..?பெண்ணை அவ்வாறு பார்க்க தெரியாத குருட்டு விழிகளைத்தான்
நீ.. பெற்றிருக்கிறாயா..?.
எத்தனை நாள்தான் நாமும் பட்டினி சாவை கட்டச்செய்தியாகவும், பத்மபூஷன் விருதுகளை தலைப்பு செய்திகளாகவும் பார்ப்பது .
அன்று ஆஸ்த்திரியன் அச்சகத்தை தண்டிக்க ஒரு ஹிட்லர் இருந்தார் ஆயிரக்கணக்கான ஆஸ்த்திரியன் அச்சகத்தை இன்று நாம் காணுகிறோம் இவற்றை யார் தண்டிப்பது..?.
சமூக அக்கறையின்றி பரபரப்புக்காகவும் ,இனவெறிக்காகவும், பணவெறிக்காகவும் வெளிவரும் பத்திரிக்கைகளை படிப்பதற்கு அல்லாமல் வேறு எப்படி பயன்படுத்தலாம் .?
சவரம் செய்த முடிகளை துடைக்க , குழந்தையின் வாந்தியை, மலத்தை அள்ளி சுத்தம் செய்ய , அழுக்கேறிய ரயில் வண்டியின் இருக்கையில் விரிக்க ,
நடை பாதையில் கிடக்கும் சாக்கடை மண்ணின் மீது பரப்ப , என பயன்படுத்தலாம் .வேறென்ன செய்யலாம் அதை கொண்டு ....?
....................................................................................................................

