18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணுடன் சம்மத பாலுறவு வைத்துக்கொள்வது குற்றம் இல்லை - டெல்லி நீதிமன்றம் தான்..!

ஒரு வழக்கில் டெல்லி போலீசாரும், டெல்லி மகளிர் ஆணையமும் சமீபத்தில் இயற்றப்பட்ட ' போக்சோ ' சட்டப்படி ( குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின் படி ..) 13 வயது முதல் 18 வயது வரையிலான பருவ வயதினர் எந்த விதமான செக்ஸ் உறவும் வைத்துக்கொள்ள ஒட்டுமொத்த தடை வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தனர்...
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டால், 18 வயதுக்கு உட்பட்ட எந்த ஒரு தனி நபரின் உடலும் அரசின் சொத்தாகி விடும். 18 வயதுக்குட்பட்ட தனிநபர் மற்றொருவருடன் உடல் இன்பம் அனுபவிக்க முடியாமல் போய் விடும் என்று அஞ்சுகிறேன்..
அதே நேரத்தில் மிக இளம் வயதில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது பாதுகாப்பற்ற செக்ஸ் உறவில் ஈடுபட்டாலோ அதனால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகக்கடமை நம் அனைவருக்கும் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் இருக்கிறது...
' போக்சோ ' சட்டத்தைப் பொறுத்த மட்டில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளாகவே கருதுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவின்படி, 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் சம்மத பாலுறவு வைத்துக்கொள்வது குற்றம் ஆகாது என்று தீர்ப்பு கூறியுள்ளது டெல்லி நீதிமன்றம்....!
ஆக, கார்ப்பரேட்களின் தாரக மந்திரமான ' ப்ரீ செக்ஸ் ' - ஐ வலியுறுத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன,
கார்ப்பரேட்களின் ஒரே ஆயுதம் நுகர்வு கலாசாரம் தான்...அந்த நுகர்வுக்கு பாலியல் அதாவது செக்ஸ் வெறியும், பெண்களையே நுகர்வுப் பொருளாக மாற்றியதன் மூலம் மட்டுமே உலகமயம் தாக்குப்பிடிக்கின்றன..... தாக்குப்பிடிக்கும்...இதற்கு சட்டமும் நீதியும் துணை அல்ல....கைகோர்த்துக் கொண்டு இயங்கும்....என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு சான்றுதான்.....!
சங்கிலிக்கருப்பு