குருதியில் வழியும் இதயம்

மணம் ரணமானது
மல்லிகை பூத்த பின்
வாசம் தர மறுக்கிறது...!

மாக்கோலங்களும்
புக்கோலங்களும்
வாசல் நிறைய
வரைந்து.....!

பல நூறு தடவை
பார்த்து
பார்த்து.
வர்ணம் பூசுகிறாய்

பாதக்கொலுசு
சத்தமாக
வாய்விட்டு
சிரிக்கிறாய்...!

வருஷம் கடந்து
வந்தேன்...
உன் இதழ்
மேட்டில்
முதல் காதலனாக...!

உனக்காக
உள்ளம் நனைத்து
வெள்ளமாய்
திரண்டு வந்தேன்
வேதனையோடு...!

வெளிக்கதவை சாத்தி.
உன் இதயக் கதவை
பூட்டினாய்
இரக்கமின்றி....!

கால்கள் நடுங்க
கண்ணீர் என்னை
கைப்பிடித்து
கன்னம் நனைத்து
தாங்கி சென்றது
இடுகாட்டுக்கு...!

இமைகளுக்குள்
உன்னை மூடி
சவக்குழியில்
உன் நினைவுகளை
என்மீது இறக்கி...!

இமை வெடித்து
இறுதி நீர் வடித்து
நெஞ்சம் பிளந்து
குருதி குடைந்து
இதயம் கொடுத்து...!

இரத்தம் சொட்ட
நடந்தேன்....!

பெண் இல்லா
உலகிற்கு...!!!

***கே.கே..விஸ்வநாதன்***

எழுதியவர் : கே.கே. விஸ்வநாதன். (27-Aug-13, 9:59 pm)
சேர்த்தது : K.K. VISWANATHAN
பார்வை : 97

மேலே