பட்டம் பற...! பற....!! -(அஹமது அலி)

ஆகாய வீதிகளில்
===அழகழகாய் பட்டங்கள்
ஆங்காங்கே பறந்து பறந்து
===பறிக்கும் நம் நெஞ்சங்கள்!

சீன தேசம் கண்டெடுத்த
===சிங்காரப் பட்டமாம்
சிறகடித்து பறக்கும் இது
===காகிதப் பறவையாம்!

வாலை நல்லா ஆட்டி ஆட்டி
===வானில் பறக்கும் பட்டமாம்
வாலை இழந்து பறக்கும் போது
===துடிதுடிக்கும் பாவமாய்!

விமானத்தின் முன்னோடியாம்
===விண்ணளக்கும் பட்டங்கள்
மின்சாரம் கண்டு பிடிக்க
===மிக முக்கிய காரணியாம்!

பழங்கால அறிவியலுக்கு
===பயன்பட்டது பட்டங்கள்
பலவாறு சேதி சொல்லி
===தூது போனாதாம் பட்டங்கள்!

தூரங்களை கணக்கிட
===துணை நின்றன பட்டங்கள்
காற்றின் வேகத்தை அறிந்திட
===காற்றில் பறந்தன பட்டங்கள்!

பண்டைய போர்களிலும்
===பயன்பட்டன பட்டங்கள்
பல போட்டிகளிலும் கலந்து
===வென்று வந்தன பட்டங்கள்!

பைத்தியம் போல் சிறுவர்களை
===விளையாட வைக்கும் பட்டங்கள்
பல வம்புகளையும் விளையாட்டாய்
===வாங்கி வரும் பட்டங்கள்!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (28-Aug-13, 7:40 am)
பார்வை : 384

மேலே