வான் துளிகள் ...!!

விண்குளியல் தொட்டிக்குள்
வெண்மதி நீராடுகிறாள் ....
வெட்கத்தால்
மேகத் திரைக்குள்
தன்னை மறைத்தபடி ......!!!

****************************************************

நீல வான
நீச்சல் குளத்தில்
நிலாப் பெண்
நீந்துகிறாள்
நட்சத்திர தோழிகளோடு .......!!

******************************************************

விண்மீன்கள்
கண்சிமிட்ட
நாணத்தால்
முகில் திரைக்குள்
முகம் புதைக்கிறாள்
முழுமதி .....!!!

*****************************************************

ஆகாய சாகரத்தில்
அம்புலியின் சாகசம் ....
வளர்வாள் ...
வட்ட வடிவாவாள்....
தேய்வாள்...
மறைந்திடுவாள் ....!!

*******************************************************

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Aug-13, 9:22 am)
பார்வை : 124

மேலே